ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் விவரம்

 

ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் விவரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிவர் புயல் உலுக்கி எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் அந்த புயல் சுமார் 11 கி.மீ வேகத்தில் நகருவதாகவும், 145 கி.மீ வேகத்தில் காற்று வீசி கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பல இடங்களில் அதீத கனமழை பெய்து வருவதால், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் விவரம்

இதன்காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் விவரம்:

நிவர் புயல் காரணமாக இன்று (25.11.2020 ) இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில்கள் ரத்து. அதன் விவரம் கீழ்வருமாறு:

1) வண்டி எண். 02601 – சென்னை சென்ட்ரல் – மங்களூர்

2) வண்டி எண். 02623 – சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம்

3) வண்டி எண். 02639 – சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா

4) வண்டி எண். 02671 – சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம்

5) வண்டி எண். 02673 – சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர்

ஆகிய சிறப்பு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் நாளை (26.11.2020) இயக்கப்படவேண்டிய

1) வண்டி எண். 02624 – திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல்

2) வண்டி எண். 02672 – மேட்டுப்பாளையம் – சென்னை சென்ட்ரல்

ஆகிய சிறப்பு விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.