டிஜிட்டல் பேமெண்ட்ஸ்க்கு மாறினாலும் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை விரும்பும் இந்தியர்கள்..

 

டிஜிட்டல் பேமெண்ட்ஸ்க்கு மாறினாலும் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை விரும்பும் இந்தியர்கள்..

இந்தியர்கள் ஏ.டி.எம்.லிருந்து சராசரியாக ஒரு முறை எடுக்கும் பணம் ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் அசுர வளர்ச்சி கண்டு வரும் வேளையிலும், பணத்தை ரொக்கமாக பயன்படுத்த மக்கள் விரும்புவதை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் அல்லது டிஜிட்டல் பேமேண்ட்ஸ் கடும் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைனில் பணத்தை டெபாசிட் செய்வது, பணத்தை அனுப்புவது, பொருட்களை வாங்குவது என பணத்தை டிஜிட்டல் வழிமுறையில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ரிசர்வ் வங்கியின் ஆய்வு அறிக்கையில், கடந்த 2019-20ம் நிதியாண்டில் நம் நாட்டில் 3,434.56 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட்ஸ்க்கு மாறினாலும் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை விரும்பும் இந்தியர்கள்..
ஏ.டி.எம்.லிருந்து பணம் எடுத்தல்

மேல சொன்ன தகவல் ஒரு புறம் இருந்தாலும், இன்னும் இந்தியர்கள் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். இந்தியர்கள் ஏ.டி.எம்.-லிருந்து ஒரு முறை எடுக்கும் சராசரி பணத்தின் அளவு அதிகரித்து வருவது அதனை உறுதி செய்கிறது. அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியர்கள் டெபிட் கார்ட் பயன்படுத்தி ஒரு முறை ஏ.டி.எம்.-லிருந்து எடுத்த சராசரி பணத்தின் அளவு ரூ.4,959ஆக உள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.

டிஜிட்டல் பேமெண்ட்ஸ்க்கு மாறினாலும் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை விரும்பும் இந்தியர்கள்..
டிஜிட்டல் பேமெண்ட்ஸ்

ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ருஸ்டோம் இரானி கூறுகையில், தற்போது உள்ள தொற்றுநோய் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் எதிர்பாராத செலவுகளுக்காக மக்கள் பொதுவாக பணத்தை பதுக்கி வைப்பதாக நாங்கள் நம்புகிறோம். இதனுடன் பொருளாதார நடவடிக்கைகளின் சீரான திறப்பு (லாக்டவுன் தளர்வு), தற்போதைய பண்டிகை காலம் காரணமாக சராசரி ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். ஏ.டி.எம்.லிருந்து ரூ.100-300 என்று சிறிய தொகைகளை எடுப்பது கிட்டத்தட்ட நின்று விட்டதாக தெரிகிறது. சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை மக்கள் பெரும்பாலும் டிஜிட்டல் வழியில் மேற்கொள்ள தொடங்கி விட்டதாக பி.டி.ஐ. பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.