கால்நடை மருத்துவக்கல்லூரி அமையவுள்ள இடத்தில் துணை முதல்வர் ஆய்வு

கால்நடை மருத்துவக்கல்லூரி அமையவுள்ள இடத்தில் துணை முதல்வர் ஆய்வு

தேனி

தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கால்நடை மருத்துவக்கல்லூரி அமையவுள்ள இடத்தில் துணை முதல்வர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் 265 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், அதற்கான நிதியையும் உடனடியாக ஒதுக்கி உத்தரவிட்டார்.இதற்காக தேனி தப்புக்குண்டு சட்டக் கல்லூரியின் அருகே சுமார் 228 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டது.

கால்நடை மருத்துவக்கல்லூரி அமையவுள்ள இடத்தில் துணை முதல்வர் ஆய்வு

இந்த நிலையில், கால்நடை மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பொறியாளர் மற்றும் அதிகாரிகளிடம் கட்டுமான பணிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.