தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன், துணை முதல்வர் ஆலோசனை

 

தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன், துணை முதல்வர் ஆலோசனை

தேனி

தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன், துணை முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர், தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி மற்றும் அடிப்படை பணிகளுக்காக 433 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கிராமங்களில் குடிநீர், வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பற்றியும், நிதிநிலை இருப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் நிதி நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன், துணை முதல்வர் ஆலோசனை

தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களது ஊராட்சிகளுக்கு தேவையான நிதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுவினை துணை முதல்வரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், திட்ட இயக்குனர் திலகவதி, கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.