உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு!!

மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தாழ்வு பகுதியால் ஒடிசா ,பஞ்சாப் ,சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் , ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி ,வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி ,ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி , தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.