கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்குங்க… தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த ஜனநாயக வாலிபர் சங்கம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்குங்க… தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த ஜனநாயக வாலிபர் சங்கம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடி படத்தை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் மனு அளித்தனர்.

கேரளாவில் மொத்தம் 149 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக கேரளாவை பொறுத்தவரை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்குங்க… தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த ஜனநாயக வாலிபர் சங்கம்
பிரதமர் மோடி

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடவுளின் தேசத்தில் பா.ஜ.க.வுக்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த ஆண்டு நடைபெற சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடி படத்தை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் மனு அளித்தனர்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்குங்க… தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த ஜனநாயக வாலிபர் சங்கம்
சான்றிதழில் மோடி படம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மிதுன் ஷா இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்மையில் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட சான்றிதழில் மோடியின் புகைப்படம் இருந்தது. மேலும் அதில் அவரின் வார்த்தைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது தேர்தல் நடத்த விதிகளை மீறியதாக இருப்பதால் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். மோடியின் புகைப்படம் இருப்பது வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அதனை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.