தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் , “வெளிநாடு செல்வோர் 28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்; 84 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களிலேயே கோவிலிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.உடனடியாக அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று வழங்கப்படும்”என்றார்.

தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்திற்கு இதுவரை 1.26 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 1.17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா இறப்பை மறைக்கவோ, மறுக்கவோ தமிழக அரசுக்கு எண்ணம் இல்லை. கொரோனா இறப்பை மறைக்கவும் முடியாது. மக்கள் தொடர்ந்து முககவசம் அணிந்து மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் ” என்று கூறினார்.