தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது அபாயகரமான டெல்டா பிளஸ் கொரோனா – ரெட் அலர்ட்!

 

தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது அபாயகரமான டெல்டா பிளஸ் கொரோனா – ரெட் அலர்ட்!

இந்தியாவை உலுக்கிய இரண்டாம் அலைக்குக் காரணம் இந்தியாவிலேயே உருமாறிய டெல்டா கொரோனா தான். இந்த வகை வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய கொரோனா வைரஸை காட்டிலும் 50% வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டை டார்கெட் செய்து ஆட்டிப்படைத்ததும் இந்த டெல்டா கொரோனா தான். சமீபத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை நடத்திய ஆய்வில் அதிர வைக்கும் இந்தத் தகவல் வெளியானது. இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவுவது மட்டுமில்லாமல் உடலுக்குள் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தவல்லது.

தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது அபாயகரமான டெல்டா பிளஸ் கொரோனா – ரெட் அலர்ட்!
தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது அபாயகரமான டெல்டா பிளஸ் கொரோனா – ரெட் அலர்ட்!

சுமார் 80 நாடுகளுக்கு இந்த வகை வைரஸ் பரவி குடைச்சல் கொடுத்துள்ளது. குறிப்பாக பிரிட்டனில் மூன்றாம் அலை தொடங்கியதற்கு இந்த வைரஸ் தான் காரணம். அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதும் இதே வைரஸ் தான். தடுப்பூசிகள் கூட தங்களது செயல்திறனை இந்த வைரஸ் முன் இழக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பு டெல்டா கொரோனாவை கவலையளிக்கக் கூடிய வைரஸாக (Variant Of Concern) வகைப்படுத்தியுள்ளது. இதுவே கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க இதிலிருந்து உருமாறி டெல்டா பிளஸ் கொரோனா என இன்னொரு வகை உருவாகியிருக்கிறது.

இந்த வைரஸ் சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் தெரியவில்லை. அது எவ்வாறு செயல்படும், எந்த வேகத்தில் பரவும் என எதுவுமே தெரியவில்லை. முழுமையான ஆய்வுக்குப் பின்பே தெரியவரும். ஆனால் இந்தியாவில் மூன்றாம் அலை உருவாக இந்த வைரஸ் காரணமாக இருக்கக் கூடும் என நிபுணர்கள் அனுமானிக்கின்றனர். தற்போது இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது அபாயகரமான டெல்டா பிளஸ் கொரோனா – ரெட் அலர்ட்!

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நேற்று இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சூழலில் தற்போது தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வைரஸை கவலையளிக்கக் கூடிய வைரஸாக மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நான்கு மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த துரிதமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.