இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல்!

 

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல்!

பீர்க்கங்காய்… இதில் கூட்டு, கிரேவி, சாம்பார் செய்திருப்போம். ஆனால், பீர்க்கங்காய் தோலை துவையலாகச் செய்து சாப்பிடலாம் என்பது நம்மில் பலர் அறிந்திருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்காக பீர்க்கங்காயில் துவையல் செய்வது எப்படி என்பதைச் சொல்கிறோம்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல்!
துவையல்:
பீர்க்கங்காய் துவையல் செய்ய தேவையான பொருள்கள் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் தோல் ஒரு கப், சிவப்பு மிளகாய் ஐந்து எண்ணிக்கை, கடலைப்பருப்பு அரை கப். அதேபோல் தேங்காய்த் துருவல் அரை கப், சிறிய எலுமிச்சை அளவு புளி, தேவைக்கேற்ப உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். தாளிப்பதற்கு அரை டீஸ்பூன் கடுகு, எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை ஐந்து இலை.

வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து பீர்க்கங்காய் தோல் உள்பட அனைத்துப் பொருள்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பீர்க்கங்காய் தோலை மட்டும் நன்றாக முறுகலாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல்!இட்லி, தோசைக்கு…
வறுத்து வைத்த பொருள்கள் அனைத்தும் சூடு ஆறியதும் மிக்சியில் அரைக்க வேண்டும். புளியை ஊற வைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஏற்கெனவே அரைத்த கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இட்லி, தோசைக்கு சேர்த்துக் கொண்டால் இந்தத் துவையல் நல்லதோர் தேர்வாக இருக்கும். அதேபோல் சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் நீர்ச்சத்து நிறைந்தது என்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சரும பராமரிப்பில் பீர்க்கங்காய் சிறந்த பங்காற்றும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல்!
நோய்களை நீக்கும்:
பீர்க்கங்காய் கிடைக்கும்போது வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தும்போது முதலில் தோலை நீளமாக வெட்டி எடுத்து நீரில் கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக்கொண்டால் காய்கறிகள் கிடைக்காத சூழலில் இந்த பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்து சாப்பிடலாம்.

பீர்க்கங்காய் சர்க்கரை நோய், புற்று நோய், இதயம் மற்றும் இதய நாளங்களில் ஏற்படும் நோய்களைத் தடுத்து நிறுத்தக்கூடியது. இதற்கு மலமிளக்கும் தன்மை இருப்பதால் வயிறு சுத்தம் செய்ய நினைப்போர் அவ்வப்போது சாப்பிடலாம். சிறுநீரைப் பெருக்கும் குணம் இருப்பதால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு இது நல்லது.

காய்க்கு இருக்கும் சத்து அதன் தோலிலும் நிச்சயம் சத்துகள் இருக்கும் என்பதால் தாராளமாக பீர்க்கங்காய் தோலைப் பயன்படுத்தலாம். விலை குறைவாகக் கிடைக்கும்போது கிலோ கணக்கில் வாங்கி தோலைச் சீவி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.