‘நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்’: டெல்லி – உ.பி இணைக்கும் சாலைகள் முற்றுகை!

 

‘நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்’: டெல்லி – உ.பி இணைக்கும் சாலைகள் முற்றுகை!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், உத்திரபிரதேசத்தை இணைக்கும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து டெல்லியின் புராரி மைதானத்தில் கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு சில மாநில விவசாயிகள் மட்டுமே அதில் பங்கேற்ற நிலையில், நாளுக்கு நாள் பல்வேறு மாநில விவசாயிகள் அங்கு திரண்டனர். உணவு, மின்சாரம், மொபைல்களுக்கு சார்ஜ் என அனைத்தையும் அங்கேயே உருவாக்கிக் கொண்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்’: டெல்லி – உ.பி இணைக்கும் சாலைகள் முற்றுகை!

இதனிடையே, 6 முறை போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது தான் இந்த போராட்டத்திற்கான ஒரே தீர்வு என அறிவித்த விவசாயிகள், கடும் குளிரிலும் இன்று வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரால் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கவும் நேர்ந்தது.

‘நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்’: டெல்லி – உ.பி இணைக்கும் சாலைகள் முற்றுகை!

இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் டெல்லியிலிருந்து உத்திர பிரதேசத்தை இணைக்கும் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால், டெல்லியில் இருந்து காஜியாபாத் செல்லும் சாலை மூடப்பட்டிருக்கிறது. மேலும், நிஜாமுதீன் கட்டா, அக்ஷர்தாம் மற்றும் காசிப்பூர் வழியாக செல்லும் வாகனங்கள் ஆனந்த் விஹார், அப்சரா, போப்ரா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.