புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் டெல்லி முதலிடம்… அப்ப தமிழ்நாடு?

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் டெல்லி முதலிடம்… அப்ப தமிழ்நாடு?

கொரோனாவின் பிடியில் சிக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் பல நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கியிருக்கும் சூழலில், இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,903 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,405 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டின் தற்போதைய தொற்றுகளின் எண்ணிக்கை 5,09,673 ஆகும்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் டெல்லி முதலிடம்… அப்ப தமிழ்நாடு?

இது வரை 79,17,373 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைதல் விகிதம் 92.56 சதவீதமாக உள்ளது.

புதிய பாதிப்புகளில் 79 சதவீதமும், 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கொவிட் காரணமான உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் டெல்லி முதலிடம்… அப்ப தமிழ்நாடு?

இந்தியாவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தற்போது டெல்லியே முதல் இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று அடங்கியிருந்த டெல்லியில் மீண்டும் அதிகரிப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் உள்ளன. தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது.

நோயாளிகள் தினசரி குணமடைவதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும் தமிழநாடு ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் டெல்லி முதலிடம்… அப்ப தமிழ்நாடு?

தினசரி அடையும் இறப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும் தமிழ்நாடு ஏழாம் இடத்திலும் உள்ளன.