110 ரன்களுக்குள் டெல்லியைச் சுருட்டியது மும்பை!

 

110 ரன்களுக்குள் டெல்லியைச் சுருட்டியது மும்பை!

இன்றைய ஐபிஎல் தொடரில் முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்!

ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பையும் மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியும் மோதும் ஆட்டத்தில் டெல்லி முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்தி வெற்றிக்குப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.

110 ரன்களுக்குள் டெல்லியைச் சுருட்டியது மும்பை!

டாஸ் வென்ற மும்பை கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, டெல்லி பேட்டிங் ஆடியது. ஓப்பனிங் வீரர்கள் பிரத்திவ் ஷா 10, தவான் 0 என்று அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 25, பண்ட் 21, ஸ்டொயினிஸ் 2, ஹெட்மெயர் 11, அஸ்வின் 12 என்று வரிசையாக விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன.

மும்பை அணி பவுலர்களின் அசத்தலான பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

110 ரன்களுக்குள் டெல்லியைச் சுருட்டியது மும்பை!

மும்பை தரப்பில் போல்ட், பும்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜெயந்த் யாதவ் 3 ஓவர்கள் வீசி 18 ரன்களும், க்ருணால் பாண்டியா 3 ஓவர் வீசி 13 ரன்களுமே கொடுத்திருந்தனர்.

111 எனும் மிகச் சுலபமான இலக்கை நோக்கி பேட்டிங் ஆட மும்பை வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.