டெல்லி முதலில் பேட்டிங் – ஐபிஎல் இறுதிப் போட்டி

 

டெல்லி முதலில் பேட்டிங் – ஐபிஎல் இறுதிப் போட்டி

60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இன்று இறுதிப்போட்டி. மோதும் அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ். பிளே ஆஃப் சுற்றில் அனல் பறக்க போட்டிகள் முடிந்து இன்று இன்னும் கூடுதலான எதிர்பார்ப்போடு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி முதலில் பேட்டிங் – ஐபிஎல் இறுதிப் போட்டி

ரோஹித் ஷர்மா உடல்நலம் தேறி மீண்டும் அணிக்குள் வந்தது பெரிய பலம். அதை எதிர்த்து களம் காணும் டெல்லி அணியும் அதற்கு சளைத்தது அல்ல. இந்த சீசனில் இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் நடந்திருக்கின்றன. மூன்றிலுமே வென்றது மும்பை. அதுவும் மிகச் சமீபமாக பிளே ஆஃப் சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ருசித்தது மும்பை.

டெல்லி முதலில் பேட்டிங் – ஐபிஎல் இறுதிப் போட்டி

ஏற்கெனவே 4 முறைகள் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை. அதனால், இறுதிப்போட்டிக்கான வியூகத்தை இந்நேரம் தெளிவாக வகுத்திருக்கும். இம்முறை அது மீண்டும் வென்றால், 5 முறைகள் கோப்பையை வென்ற அணி எனும் சாதனையைப் படைக்கும்.

இன்று வெல்லப்போவது யார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தார்.