“உங்களிடம் திருடிய போனை உங்களிடமே விற்கும் கூட்டம்”-OLX ல் விற்று உல்லாசமாக வாழ்ந்தார்கள்

“உங்களிடம் திருடிய போனை உங்களிடமே விற்கும் கூட்டம்”-OLX ல் விற்று உல்லாசமாக வாழ்ந்தார்கள்

டெல்லியின் துவாரகாவில் ஜிதேந்தர் முண்டா ,மொஹமட் உசேன் மற்றும் அர்ஷ்,சலீம் ஆகியோர் மொபைல்போன்களை திருடி olx ல் விற்று பணம் சம்பாதிப்பதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர் .

“உங்களிடம் திருடிய போனை உங்களிடமே விற்கும் கூட்டம்”-OLX ல் விற்று உல்லாசமாக வாழ்ந்தார்கள்
ஜிதேந்தர் முண்டா மற்றும் மொஹமட். உசேன் ஆகிய இருவரும் பொது இடங்களுக்கு சென்று மக்களின் மொபைல் போனை திருடிக்கொண்டு வந்து அர்ஷ் என்பரிடம் கொடுப்பார்கள் .பிறகு அவர் தன்னுடைய போலியான பல olx அக்கௌண்டுகள் மூல அதை நல்ல விலைக்கு விற்பார் .
இப்படி அவர்கள் திங்கள்கிழமை டெல்லியின் மார்க்கட்டில் ஒருவரின் மொபைல் போனை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டனர் .அவர்களை பிடித்து போலீசார் தீர விசாரித்து சோதனையிட்டதில், அவர்கள் ஒரு கூட்டமாக செயல்பட்டு இதுவரை பலநூற்றுக்கும் மேற்பட்ட போன்களை திருடி விற்றதை ஒப்புக்கொண்டனர் . பிறகு அவர்களின் வீட்டில் சோதனையிட்ட போலீஸ், அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்களை மட்டுமே பறிமுதல் செய்தனர் .மற்ற மொபைல் போன்கலை ஆன்லைனில் உடனுக்குடன் விற்று காசாக்கிவிடுவார்களாம் .ஒருமுறை ஒருவரிடம் திருடிய மொபைல் போனை அவரிடமே olx ல் விற்றுள்ளதை அவர்கள் கூறினார்கள் ,
இதனால் போலீசார் பொதுமக்களை தங்களின் மொபைல் போணை ஜாக்ரதையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர் .இந்த ஊரடங்கு நேரத்தில் தங்களிடம் செலவுக்கு காசில்லாததால் ஒரு கூட்டமே இந்த மொபைல் போன் திருட்டில் இறங்கியுள்ளதாக கூறினார்கள் .

“உங்களிடம் திருடிய போனை உங்களிடமே விற்கும் கூட்டம்”-OLX ல் விற்று உல்லாசமாக வாழ்ந்தார்கள்