டெல்லியில் கொரோனாவால் 984 பேர் உயிரிழப்பு ஆனால் 2,098 பேர் அடக்கம்!உயிரிழப்பு எண்ணிக்கையால் சர்ச்சை..!

டெல்லியில் கொரோனாவால் 984 பேர் உயிரிழப்பு ஆனால் 2,098 பேர் அடக்கம்!உயிரிழப்பு எண்ணிக்கையால் சர்ச்சை..!

டெல்லியில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தற்போது இரட்டிப்பு வீதமாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.5 லட்சம் பேராக இருக்கும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியில் 31 ஆயிரத்து 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 905 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11,861 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கொரோனாவால் 984 பேர் உயிரிழப்பு ஆனால் 2,098 பேர் அடக்கம்!உயிரிழப்பு எண்ணிக்கையால் சர்ச்சை..!

டெல்லியில் இதுவரை 2,098 சடலங்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மாநகராட்சி தலைவர்கள் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 984பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ள நிலையில் மாநகராட்சி தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. டெல்லி தெற்கு மாநகராட்சியில் 1,080,வடக்கில் 976, கிழக்கில் 42 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.