உச்சத்தில் கொரோனா – மொத்தமாக இழுத்து சாத்திய தலைநகர்!

 

உச்சத்தில் கொரோனா – மொத்தமாக இழுத்து சாத்திய தலைநகர்!

இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களையும் கொரோனா இரண்டாம் அலை சூறையாடி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தலைநகர் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல், மருத்துவக் கட்டமைப்பை ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி, தடுப்பூசி போதாமே என பல்வேறு வகை தாக்குதல்களுக்கு அம்மாநில அரசுகள் ஆளாகியிருக்கின்றன.

உச்சத்தில் கொரோனா – மொத்தமாக இழுத்து சாத்திய தலைநகர்!

இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கின்றன. ஆரம்பத்தில் இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் நிலைமை மிக மோசமாகப் போனதால் இந்தியாவின் முதல் மாநிலமாக மீண்டும் அனைத்து நாட்களிலும் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

உச்சத்தில் கொரோனா – மொத்தமாக இழுத்து சாத்திய தலைநகர்!

இம்மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது டெல்லியிலும் இன்று நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.