பிளாஸ்மா தெரபிக்கு பிறகு சத்யேந்திர ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம்

 

பிளாஸ்மா தெரபிக்கு பிறகு சத்யேந்திர ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம்

டெல்லி: பிளாஸ்மா தெரபிக்கு பிறகு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் ஜூன் 15-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன்  மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிளாஸ்மா தெரபிக்கு பிறகு சத்யேந்திர ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம்

அவருக்கு நுரையீரல் தொற்று தீவிரமடைந்ததால் ஆக்சிஜன் ஆதரவில் சத்யேந்தர் ஜெயின் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேறியுள்ளது. அவரது காய்ச்சல் குறைந்து, ஆக்ஸிஜன் அளவு மேம்பட்டுள்ளது. நாளைக்குள் அவர் பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.