“மக்கள் போராட்டம் உங்களுக்கு பயங்கரவாதமாக தெரிகிறதா?” – மத்திய அரசை கிழித்தெடுத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

“மக்கள் போராட்டம் உங்களுக்கு பயங்கரவாதமாக தெரிகிறதா?” – மத்திய அரசை கிழித்தெடுத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு நிறைவேற்றியதும் நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே. அப்போது தலைநகரில் நடந்த போராட்டங்களும், காவலர்கள் அவர்களைக் கையாண்ட விதமும் மறக்க முடியாத கருப்பு பக்கங்கள். வடக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் எனக் கூறி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவிகள் நடாஷா நர்வால், தேவகான கலீதா ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தது.

“மக்கள் போராட்டம் உங்களுக்கு பயங்கரவாதமாக தெரிகிறதா?” – மத்திய அரசை கிழித்தெடுத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

மூவர் மீதும் பயங்கரவாத தடுப்புச் சட்டமான உபா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் முடிவில்மூவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், “மக்களுக்கு போராட்டம் நடத்தும் தார்மீக உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. போராட்டத்துக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு அளவுதான் வித்தியாசம்.

“மக்கள் போராட்டம் உங்களுக்கு பயங்கரவாதமாக தெரிகிறதா?” – மத்திய அரசை கிழித்தெடுத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை அடக்க நினைக்கும் மத்திய அரசின் முனைப்பை பார்க்கும்போது, அந்த மெல்லிய கோடு மெல்ல மெல்ல மறைந்து வருவதாக தோன்றுகிறது. அரசின் இந்த எண்ணத்துக்கு நாங்களும் வலு சேர்த்தால் அதுதான் ஜனநாயகத்தின் கருப்பு நாள். உபா சட்டம் என்பது பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம். ஒருவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே அவர் மீது இந்தச் சட்டம் பாய வேண்டும். சாதாரண குற்றச் செயல்களுக்கு எல்லாம் இந்த சட்டத்தை பயன்படுத்துவது சரியான போக்கு அல்ல” என்று கடுமையாக விமர்சித்தனர்.