டெல்லி – குர்கான் எல்லை மூடல்…பாதசாரிகள் ஆர்ப்பாட்டம்

 

டெல்லி – குர்கான் எல்லை மூடல்…பாதசாரிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லி – குர்கான் எல்லையின் சாலை மூடப்பட்டதால் கோபமுற்ற பாதசாரிகள் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்லியுடன் இணைக்கும் சாலைகளை மூட ஹரியானா அரசு முடிவு செய்தது. அதனால் டெல்லி மற்றும் குர்கானை இணைக்கும் சாலை இன்று காலை மூடப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனால் தில்லி-குர்கான் எல்லையை கடக்க விடாமல் நிறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில கார்களை மட்டும் எவ்வித சோதனையும் இல்லாமல் எல்லையை கடக்க விடுவது பற்றி போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே சென்றதால் அங்கிருந்த மக்களை வீடு திரும்பும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சோதனைச் சாவடி முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. டெல்லி – குர்கான் எல்லை மூடப்பட்டதால் அங்கு சில மணி நேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.