‘தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது’… டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

 

‘தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது’… டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாட்டின் காரணமாக தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உள்ளது. தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் டெல்லியில் காற்று தரக் குறியீடு மோசமான நிலையில் உள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து எரிக்கப்படும் விவசாய கழிவுகளாலும் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தாலும் காற்று மாசு பிரச்சனை ஓய்ந்ததாக இல்லை.

‘தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது’… டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

இப்படி ஒரு சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். தெளிவற்ற வானிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். செயற்கை ஆக்சிஜன் மூலம் டெல்லி மக்கள் சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அரசாங்கம் உள்ளது.

‘தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது’… டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், தீபாவளியையொட்டி டெல்லியில் வெடிக்க தடை விதித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு விற்பனைக்கும் தடை விதித்துள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.