#IPL2021: சொதப்பிய மும்பை! தட்டித்தூக்கிய டெல்லி

 

#IPL2021: சொதப்பிய மும்பை! தட்டித்தூக்கிய டெல்லி

ஐபிஎல் தொடரின் 13வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். குயின்டன் டி காக் 1 ரன்னிலும் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடி வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 44 ரன்களில் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை சேர்த்தது. டெல்லி தரப்பில் சிறப்பாக பந்துவீசி அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

#IPL2021: சொதப்பிய மும்பை! தட்டித்தூக்கிய டெல்லி

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ப்ரிதிவி ஷா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு தவான் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஸ்மித் தனது பங்குக்கு 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சென்னை மைதானம் இலக்கை விரட்டும் போது மிகவும் மெதுவாகி ரன் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது , இதனால் பேட்ஸ்மேன்கள் ஒரு பந்துக்களுக்கு ஒரு ரன் எடுக்கவே சிரமப்பட்டனர். பின் தவான் 45 ரன்களிலும் பன்ட் 7 ரன்களிலும் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பானது. கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. 19.1 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி 3வது வெற்றியாகும். இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது