ஹரியானா போய் கிரிகெட் விளையாடிய டெல்லி பா.ஜ.க. தலைவர்…. லாக்டவுன் விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தானா?

 

ஹரியானா போய் கிரிகெட் விளையாடிய டெல்லி பா.ஜ.க. தலைவர்…. லாக்டவுன் விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தானா?

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க டெல்லி மற்றும் ஹரியானா எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், லாக்டவுன் விதிமுறைகளை மீறி டெல்லி பா.ஜ.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி நேற்று அரியானாவின் சோனிபட் அருகில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடினார். இந்த நிகழ்வில் லாக்டவுன் விதிமுறைகளை மட்டுமில்லாமல், சமூக விலகல் விதிமுறைகளையும் அவர் மீறி உள்ளார்.

ஹரியானா போய் கிரிகெட் விளையாடிய டெல்லி பா.ஜ.க. தலைவர்…. லாக்டவுன் விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தானா?பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மதிக்காமல், மாஸ்க் அணியாமல் விளையாடினார். மேலும் சோனிபட் நிகழ்ச்சியில், பாடும்போது, செல்பிகளுக்கு போஸ்கொடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்துரையாடும்போது அவர் மாஸ்க் அணியவில்லை. மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு தலைவரை லாக்டவுன் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை மீறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஹரியானா போய் கிரிகெட் விளையாடிய டெல்லி பா.ஜ.க. தலைவர்…. லாக்டவுன் விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தானா?

இது குறித்து மனோஜ் திவாரி கூறுகையில், நான் எப்போதும் லாக்டவுன் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றுகிறேன். பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கத்தை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில், நான் அங்கு சென்றேன் மற்றும் விளையாடினேன். அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது என தெரிவித்தார்.