சசிகலா விடுதலையில் தாமதம் – தேர்தல் களத்தில் இறங்கும் டி.டி.வி. தினகரன்

 

சசிகலா விடுதலையில் தாமதம் – தேர்தல் களத்தில் இறங்கும் டி.டி.வி. தினகரன்


By subas Chandra bose


“டி.டி.வி.தினகரனை என்ன ஆளையேக் காணோம்?” என்று “டாப் தமிழ் நியூஸ்”சில் செய்தி போட்ட நேரமோ, என்னமோ அவர் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணை பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரனுக்கு உண்மையில் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. சசிகலா விடுதலை தொடர்பான பணிகளைக் ,கவனிக்க வேண்டும். தேர்தல் களம் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும்,. தனது ஒரே மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்..

சசிகலா விடுதலையில் தாமதம் – தேர்தல் களத்தில் இறங்கும் டி.டி.வி. தினகரன்

இன்னும் சசிகலா வெளியே வந்த பிறகு என்ன நடக்குமோ? அதற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்த நிலையில் “சின்னம்மா சீக்கிரமே விடுதலையாகி வெளியில் வந்து விடுவார். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்றிருந்தார்.ஆனால் சசிகலா விடுதலை தற்போது இல்லை. அது ஜனவரிக்கு பின்னர்தான் என்பது உறுதியாகி விட்ட நிலையில் வழக்கமான தனது பணிகளுக்கு திரும்பியிருக்கிறார் முதல் கட்டமாக தனது மகள் திருமண ஏற்பாடு சம்பந்தமாக பத்திரிக்கைகள் விநியோக்கிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். இதற்கிடையே தீபாவ்ளி முடிந்ததும் தனது பிரச்சார பயணத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்.

சசிகலா விடுதலையில் தாமதம் – தேர்தல் களத்தில் இறங்கும் டி.டி.வி. தினகரன்


முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தனது கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். பேராவூரணியில் சசிகலா தரப்பு உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் இந்தப்பகுதியில் முத்தரையர், மற்றும் முக்குலத்தோர் அதிகம் பேர் வசிக்கின்றனர். எனவே டிடிவி. தினகரன் வரும் சட்டமன்றத்தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.`