கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் : என்ன காரணம்?

 

கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் : என்ன காரணம்?

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தாமதமாகியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் 3,000 தடுப்பூசி மையங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில், பிரதமர் காணொளி வாயிலாக இதனை தொடக்கி வைத்த பிறகே தடுப்பூசி போடுவது தொடங்கியது. முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்ததன் படி, செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் : என்ன காரணம்?

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் ‘கோவின்’ என்ற செயலியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே தடுப்பூசி போடப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி தொடங்கி சுமார் 5 மணி நேரம் ஆன நிலையில் ,கர்நாடகா, ஹரியானா, பஞ்சாபில் குறைந்த அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாம், மேலும், கோவின் செயலியும் முறையாக இயங்கவில்லையாம்.

நாள் ஒன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எதிர்பார்த்த அளவை விட குறைந்த அளவிலேயே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இது தடுப்பூசி போடும் பணியில் தாமதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 3,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.