“ஆபாச கமெண்ட் போட்டால் ஆப்பு “பெண்ணின் பேஸ் புக் போட்டோவை விமர்சித்த வாலிபர் மீது நடவடிக்கை …

இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் போட்டோக்கள் விடீயோக்களுக்கு பல கீழ்த்தரமான கம்மெண்டுக்களை பலர் வெளியிடுகின்றனர் ,இது பலரின் மனதை புண்படுத்தும் என்பதை அவர்கள் அறிவதில்லை ,இப்படி துபாயை சேர்ந்த ஒரு பெண்ணின் போட்டோவுக்கு ஒருவர வெளியிட்ட தரம் தாழ்ந்த கமெண்ட் மூலம் பாதித்த அந்த பெண், போலீசில் கொடுத்த புகார் இப்போது வைரலாகியுள்ளது .

துபாயில் வசிக்கும் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னுடைய பேஸ் புக்கில் தன்னுடைய போட்டோக்களை போட்டுள்ளார் .அவரின் அந்த போட்டோவுக்கு உடுப்பியை சேர்ந்த சிவபிரசாத் என்ற வாலிபர் ஆபாச கம்மெண்ட் வெளியிட்டுள்ளார் .இதனால் கோபமுற்ற அந்த பெண் பெங்களுர் சைபர் கிரைம் போலீசில் அந்த நபர் மீது புகார் கொடுத்துள்ளார் .


இது பற்றி அந்த பெண் தன்னுடைய புகாரில் தன்னுடைய பேஸ் புக் அக்கௌண்டில் தன்னுடைய நணபர்களுக்காக அவர் போட்டோக்கள் வெளியிடுவதாகவும் ,அந்த போட்டோவை பார்த்த அந்த நபர் சில ஆபாச கம்மெண்ட் வெளியிட்டுள்ளதால் ,தன்னுடைய உறவினர்கள் ,நண்பர்கள் அதை பார்த்து மனவேதனையடைந்ததகவும் ,இதனால் தானும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதனால் அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்த பெண் அந்த நபரின் கமெண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சைபர் கிரைமுக்கு அனுப்பிவைத்துள்ளார் .,அவர்கள் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் .

Most Popular

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...