பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

 

பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு அலையவிடுவது அரசியல்வாதிகளின் வழக்கம். அப்படி பத்திரிகைகள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு, தமிழக முதல்வர், அமைச்சர்கள் பற்றிய ஊழல், முறைகேடு தொடர்பான செய்தியை வெளியிடும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாய்வது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. தினமலர், முரசொலி, தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட எல்லா பத்திரிகைகள் மீதும் இப்படி வழக்குகள் உள்ளன. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் முரசொலி மீது 20 வழக்குகளும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன், தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
நீதிபதி அப்துல் குத்தூர் விசாரணை நடத்தினார். அப்போது பத்திரிகைகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தலைவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்யும் விதமாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. அந்த கருத்து அடிப்படையில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது அவதூறு தண்டனை வழக்கு. மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் செய்திகளை ளெியிட்டால் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது” என்று வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.