நல்லா தூங்கறவங்கள பார்த்து ஏங்கறீங்களா ?உங்களையும் நல்லா தூங்க வைக்கிறோம் வாங்க

 

நல்லா தூங்கறவங்கள பார்த்து ஏங்கறீங்களா ?உங்களையும் நல்லா தூங்க வைக்கிறோம் வாங்க

கல் முழுக்க உழைத்துக் களைத்துப் போவது உடம்பு மட்டுமல்ல… மனமும்தான்! இரண்டையும் ரிலாக்ஸ் செய்வது உறக்கம். நிம்மதியான, போதுமான தூக்கம் இல்லையா? அடுத்த தினம் ஒரு நல்ல தினமாக யாருக்குமே விடியாது! கோபம், எரிச்சல், தேவையற்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்; உற்சாகம் நம்மைவிட்டுக் கழன்று ஓடியிருக்கும். “தொடர்ச்சியான தூக்கமின்மை மனஅழுத்தம் தொடங்கி இதய நோய்கள் வரை பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்” என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதேநேரத்தில், “நிம்மதியாக தூக்கம் பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்து” என்று அடித்தும் சொல்கிறார்கள். 

நல்லா தூங்கறவங்கள பார்த்து ஏங்கறீங்களா ?உங்களையும் நல்லா தூங்க வைக்கிறோம் வாங்க

ஷிஃப்ட் வேலையினால் ஏற்படும் தூக்க பிரச்சினைகள்:

தூக்கப் பிரச்னை மற்றும் இதர உடல் உபாதைகள் பகற்பொழுதில் அல்லாமல் மற்ற நேரத்தில் குறிப்பாக இரவில் வேலை செய்யும்போது ஏற்படும். இத்தகைய நேரங்களில் பலகாலம் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு இதய நோய், மார்பகப் புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஜீரணப் பகுதிகளில் கோளாறுகள் போன்றவை ஏற்படும். மனநலக் கோளாறுகள் வரும் வாய்ப்பும் அதிகமாகும். தூக்கத்தின் தரம் பெரிதும் பாதிக்கப்படும்.

இவர்களுக்குத் தூக்கம் வர சில குறிப்புகள்:

தூங்கும் அறை அமைதியாக, காற்று வசதிகொண்ட இருட்டு அறையாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி தொடர்ந்து செய்யவும். ஆனால், படுப்பதற்கு முன் செய்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் வேலைக்குச் செல்லும் நேரம் வரை தூங்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

சரிவிகித உணவு சாப்பிடவும்.

உங்கள் இரவு ஷிஃப்ட் முடியும் நேரத்துக்கு முன்பு காபி, வெளிச்சமான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக குளிர்ந்த நீரில் குளித்து விட்டு தூங்கச் சென்றால் நல்ல தூக்கத்தை பெற முடியும். அப்படியும் வரவில்லையா? அடுத்ததாக ஒரு சிறிய யோகாவை முயற்சி செய்யலாம். கண்களை மூடி அமர்ந்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்வாங்கி இழுத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நிமிடங்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் செய்துவரும் பட்சத்தில் உங்கள் மனமானது ஒரு அமைதி நிலையை அடையும்.

நல்லா தூங்கறவங்கள பார்த்து ஏங்கறீங்களா ?உங்களையும் நல்லா தூங்க வைக்கிறோம் வாங்க

தூக்கமின்மை

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் வீதம் நான்கு வாரத்துக்கு மேல் நீடிக்குமானால் மருத்துவரை அணுகவும்.

படுக்கையில் படுத்து 30 நிமிடங்கள் கழித்தே தூக்கம் வருவது. இரவில் தொடர் தூக்கமில்லாமல் இருப்பது.

எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட இரண்டு மணி நேரம் முன்பாகவே எழுந்துகொள்வது

இரவில் தூங்கும்போது விழிப்பு வந்தால் மறுபடியும் தூங்க 10 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது அல்லது தூக்கமே வராமல் இருப்பது.

காலையில் எழுந்ததும் புத்துணர்வாக இல்லாமல் சோர்வாக இருப்பது.

இதற்கு நீங்களாகவே மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதோ, மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைத்துள்ள தூக்க மாத்திரைகளை அவருடைய ஆலோசனையின்றி தொடர்ந்து சாப்பிடுவதோ கூடாது. இது மறுபடியும் இயற்கையாகவே உங்களுக்குத் தூக்கம் ஏற்படுவதைப் பாதிக்கும்.

சிலர் கண்ட நேரத்தில் படுத்து, கண்ட நேரத்தில் எழுந்திரிப்பார்கள். தினமுமே `இந்த நேரத்தில் படுக்கைக்குப் போய்விட வேண்டும்’ என்று ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, சரியாக பெட்டில் ஆஜராகிவிடுவது குட் ஹேபிட். ஓரிரு நாள்களில் சரியான நேரத்துக்குத் தூக்கம் வந்துவிடும். பிறகென்ன… அலாரமே வைத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பும் தானாகவே வந்துவிடும். மூளை, செரடோனின் (Serotonin), மெலடோனின் (Melatonin) ஆகிய ஹார்மோன்களின் அளவைச் சரிசெய்து, இயல்பான உறக்கத்துக்கு உத்தரவாதம் தந்துவிடும்.