ஈரோட்டில் குறைந்து வரும் கொரோனா தாக்கம் – அலட்சியம் வேண்டாம் என எச்சரிகை

 

ஈரோட்டில் குறைந்து வரும் கொரோனா தாக்கம் – அலட்சியம் வேண்டாம் என எச்சரிகை

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மொத்த பாதிப்பில் 100 -க்கு கீழ் சென்றது.

ஈரோட்டில் குறைந்து வரும் கொரோனா தாக்கம் - அலட்சியம் வேண்டாம் என எச்சரிகை

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டு உள்ள பட்டியலின்படி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 223 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நேற்று ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களாக பாதிப்பைக் காட்டிலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோட்டில் குறைந்து வரும் கொரோனா தாக்கம் – அலட்சியம் வேண்டாம் என எச்சரிகை

அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.