நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியாருக்கு விற்க முடிவு? – அதிர்ச்சி கிளப்பும் ரயில்வே அறிவிப்பு

 

நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியாருக்கு விற்க முடிவு? – அதிர்ச்சி கிளப்பும் ரயில்வே அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட ரயில் சேவைகைள தனியாருக்கு விற்பது என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை, கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகைளை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியாருக்கு விற்க முடிவு? – அதிர்ச்சி கிளப்பும் ரயில்வே அறிவிப்புரயில்சேவையை தனியாரிடம் கொடுக்க மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு முடிவெடுத்துள்ளது. சோதனை ரீதியில் பல வருமானம் கொழிக்கும் பாதைகள் தனியாருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேலும் 100க்கும் மேற்பட்ட பாதைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மங்களுர், புதுடெல்லி போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் 24 ரயில்களும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியாருக்கு விற்க முடிவு? – அதிர்ச்சி கிளப்பும் ரயில்வே அறிவிப்புஎன்ன ரயில் என்று பெயரைக் குறிப்பிடாமல் சென்னையிலிருந்து சென்று சேரும் ஊர்ப் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. திருநெல்வேலிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், மதுரைக்கு பாண்டியன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. அப்படி என்றால் இந்த ரயில்கள் எல்லாம் தனியார் மயமாகுமா என்ற கேள்வி எழுகிறது.