கோவிலைத் திறக்கக் கூடாது! – கேரளாவில் சங் பரிவார் போர்க்கொடி

 

கோவிலைத் திறக்கக் கூடாது! – கேரளாவில் சங் பரிவார் போர்க்கொடி

கோவிலைத் திறக்கக் கூடாது! – கேரளாவில் சங் பரிவார் போர்க்கொடி
கேரளாவில் இந்து கோவில்களைத் திறக்கக் கூடாது என்று சங் பரிவார் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வழிபாட்டுத்தளங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

கோவிலைத் திறக்கக் கூடாது! – கேரளாவில் சங் பரிவார் போர்க்கொடிகேரளாவிலும் கோவில்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவல் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கே அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதாலும் வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் திறக்க பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

கோவிலைத் திறக்கக் கூடாது! – கேரளாவில் சங் பரிவார் போர்க்கொடிஒவ்வொரு மாநிலத்திலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் இந்து அமைப்பினர், கேரளாவில் கோவில் திறக்கப்படும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சங் பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கூறுகையில், “கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கோவில்களைத் திறப்பது ஆபத்தானது. மேலும், கோவிலைத் திறக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பு எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை அழைத்து பேசாதது கண்டனத்திற்குரியது” என்றனர்.