நீங்க வாய்க்கு மட்டும் மாஸ்க் போடுறீங்ளா? – அப்போ என்ன ஆகும்னு பாருங்க?

 

நீங்க வாய்க்கு மட்டும் மாஸ்க் போடுறீங்ளா? – அப்போ என்ன ஆகும்னு பாருங்க?

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை எழுந்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் படிப்படியாக கூடிக்கொண்டே செல்கிறது. மத்திய அரசும் மாநில அரசுகளும் கொரோனா போய்விட்டதென அசட்டையாக இருக்காதீர்கள்; கொரோனா விதிமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடியுங்கள் என படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

நீங்க வாய்க்கு மட்டும் மாஸ்க் போடுறீங்ளா? – அப்போ என்ன ஆகும்னு பாருங்க?

ஆனால், பொதுமக்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதே கிடையாது. கொரோனாவை லெப்ட் ஹேண்டில் தான் டீல் செய்கிறார்கள். கொரோனாவோ லெப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் வண்டியை திருப்பி மக்களை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதை உணராமல் முறையாக மாஸ்க் அணியாமலும், மூக்கை விட்டு வாய்க்கு மட்டும் மாஸ்க் அணிந்தும் வெளியே சுற்றுகிறார்கள். கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடித்துவிட்டாலும் அதைப் போட்டுக்கொள்ள யாரும் முன்வருவதுமில்லை.

நீங்க வாய்க்கு மட்டும் மாஸ்க் போடுறீங்ளா? – அப்போ என்ன ஆகும்னு பாருங்க?

மற்ற பயணங்களை விட விமானப் பயணம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். கொரோனா தாக்கத்தின் ஆரம்பத்தில் மாஸ்க், உடை அணிந்துகொண்டு பயணம் செய்த விமானப் பயணிகள் தற்போது அந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வரை மாஸ்க் அணியாமல் இருப்பது, விமானத்திலிருந்து இறங்கியவுடன் மாஸ்க்கை கழற்றுவது என விதிமீறலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

Airlines Have Rules About Face Masks—That's Not Always Enough - WSJ

இதனால் கடும் அதிருப்தியடைந்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடும் கட்டுப்பாடுகளைத் தற்போது விதித்துள்ளது. அதன்படி விமான பயணத்தின்போது யாரெல்லாம் விதிகளை மீறுகிறார்களோ, அவர்கள் இனி பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது. குறிப்பாக, மூக்குக்கு கீழே மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சுற்றுவது உள்ளிட்டவை அடங்கும். பயணிகள் மூக்குக்கு கீழே சின்னதாக கேப் விட்டு மாஸ்க் அணிந்தாலும் இனி பயணம் செய்ய முடியாது.