பிரேசிலில் 24 மணி நேரத்தில் 1,239 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

 

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 1,239 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,239 பேர் இறந்துள்ளனர்.

பிரேசிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,239 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 40,919-ஆக அதிகரித்துள்ளது என தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 30,412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 808,828-ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 1,239 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

உலகில் கொரோனா நோயாளிகளை அதிகமாக பெற்றுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்காவிற்குப் பிறகு பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்தது. இன்றுவரை உலகளவில் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,23,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.