என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு!

என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 1 ஆம் தேதி வழக்கம் போல ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு!

இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே 6 பணியாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிவகுமார் என்ற பொறியாளர் கடந்த 3 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், ரவிச்சந்திரன் என்ற பொறியாளரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு!

இந்நிலையில் கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர ஊழியர் வைத்தியநாதன் உயிரிழந்துள்ளார். இதுவரை ஒரு இளநிலை பொறியாளர், 7 ஒப்பந்த தொழிலாளர்கள், 2 நிரந்தர தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.