புகழ்பெற்ற தென்கொரிய சினிமா இயக்குநர் கிம்-கி-டக் மரணம்

 

புகழ்பெற்ற தென்கொரிய சினிமா இயக்குநர் கிம்-கி-டக் மரணம்

வெனிஸ் விருது பெற்ற கிம்-கி-டக் இன்று இறந்துவிட்டார். உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கிம்-கி-டக்.

கிம் – கி – டக்கின் திரைப்படங்கள் அதிர்ச்சியை தரக்கூடிய வகையைச் சேர்ந்தவை. அழகியலுக்கும் குரூரத்திற்கும் ஒரு நூல்தான் வேறுபாடு என்பதை நேர்த்தியோடு சொல்லும் பட வகை கிம்மின் படங்கள்.

புகழ்பெற்ற தென்கொரிய சினிமா இயக்குநர் கிம்-கி-டக் மரணம்

பலர் அவர் படங்களை கொண்டாடி தீர்த்தாலும் சிலருக்கு ஒவ்வாமையோடு இருப்பார்கள். அதுவே அவரின் வெற்றி என்றும் சொல்லப்படுவதுண்டு. மனித மனங்களில் இருட்டையும் வெளிச்சத்தையும் அவரைப்போல திரையில் கொண்டுவந்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

59 வயதான கிம் – டு – டக் இன்று மரணமடைந்தார்.