சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு!

மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டியும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழப்புகள் தொடருவது சென்னைவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.