உயிரிழந்த பெண்ணிற்கு உறுதியான கொரோனா… பீதியில் உறைந்த உறவினர்கள்!

 

உயிரிழந்த பெண்ணிற்கு உறுதியான கொரோனா… பீதியில் உறைந்த உறவினர்கள்!

உயிரிழந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகயிருப்பது, இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உறவினர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சேலத்தில் கொரோனா பாதிக்கப்ட்டவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண்ணிற்கு உறுதியான கொரோனா… பீதியில் உறைந்த உறவினர்கள்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பார்வதி என்ற பெண் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 26-ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் என்று கூறி அவரை திரும்ப அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் பார்வதி மீண்டும் ராஜபாளையம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்வதி அங்கு சிகிச்சை பலனின்றி 30-ந்தேதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணிற்கு உறுதியான கொரோனா… பீதியில் உறைந்த உறவினர்கள்!
கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே உறவினர்கள் பார்வதியின் இறுதிச் சடங்கை முடித்து உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர் உயிரிழந்த பார்வதியின் கொரோனா பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகி உள்ளது. இதை இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்களில் இதையறிந்து பீதியில் உள்ளனர்.