மயானங்களில் நீண்ட வரிசையில் சடலங்கள்… அடுத்த டெல்லியாகும் சென்னை!

 

மயானங்களில்  நீண்ட வரிசையில் சடலங்கள்… அடுத்த டெல்லியாகும் சென்னை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் பாதிப்பில் தமிழகம் 3ம் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல், அடுத்த இரண்டு வாரத்திற்குள் தமிழகத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கொரனோ பேரிடரிலிருந்து மக்களை காக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது தமிழக அரசு.

மயானங்களில்  நீண்ட வரிசையில் சடலங்கள்… அடுத்த டெல்லியாகும் சென்னை!

தமிழகத்தில் அதிகமாக பாதிப்பு பதிவாகும் மாவட்டம் தலைநகர் சென்னை தான். சென்னையில் மட்டுமே நாளொன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு முதல் அலையின் போது கொரோனாவால் சென்னை சிக்கி தவித்ததைப் போன்ற நிலை மீண்டும் உருவாகியுள்ளது. படுக்கைகள் அனைத்தும் நிரம்பி சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் மாயனங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் அவல நிலை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் மின்மயானத்தில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

மயானங்களில்  நீண்ட வரிசையில் சடலங்கள்… அடுத்த டெல்லியாகும் சென்னை!

அண்மையில் தலைநகர் டெல்லியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் எரியூட்டப்பட்ட கோர சம்பவம் அரங்கேறியது. அங்கு பிணங்களை எரிக்க இடமில்லாமல், மாயனங்களில் உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது சென்னையிலும் அதே போன்ற அவல நிலை ஏற்பட்டிருப்பது சென்னை வாசிகளை பீதி அடைய செய்துள்ளது.