டெல்லியில் கொரோனா வைரஸ் 3வது அலை… பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.. மனிஷ் சிசோடியா

டெல்லியில் கொரோனா வைரஸ் 3வது அலை… பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.. மனிஷ் சிசோடியா

டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், பள்ளிகளை விரைவில் திறக்க வாய்ப்பில்லை என்று துணை முதல்வர் சிசோடியா தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிட்-19 மூன்றாவது அலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் கொரோனா வைரஸ் 3வது அலை… பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.. மனிஷ் சிசோடியா
மனிஷ் சிசோடியா

பெற்றோர்கள் தங்களது குழந்தையின் ஆரோக்கியத்தை ஆபத்தில் வைக்க விரும்ப மாட்டார்கள். பள்ளிகளை விரைவில் திறக்க வாய்ப்பில்லை. எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதி வரும் வரை பள்ளிக்கு அனுப்ப விரும்பமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடகா அரசும் டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கப்படாது என்று கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கொரோனா வைரஸ் 3வது அலை… பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.. மனிஷ் சிசோடியா
பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இது தொடர்பாக கூறியதாவது: டிசம்பர் இறுதி வரை நாம் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். நிலைமை குறித்து நாங்கள் மீண்டும் சந்தித்து தகுந்த முடிவை எடுப்போம். கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும், மாணவர்களை பாதிக்கக்கூடும் என்பதால் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நேரம் இதுவல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.