கட்டிய ஒரு மாதத்திற்குள்ளேயே இடிந்து விழுந்த பாலம் -முதல்வர் திறந்த பாலத்தின் அலங்கோலம்..

 

கட்டிய ஒரு மாதத்திற்குள்ளேயே இடிந்து விழுந்த பாலம் -முதல்வர் திறந்த பாலத்தின் அலங்கோலம்..

பீகாரில் கோபால்கஞ்சில் கந்தக் ஆற்றில் உள்ள சத்தர்காட் பாலத்தின் ஒரு பகுதி திறந்து ஒரு மாதத்திற்குள்ளேயே நேற்று (புதன்கிழமை) இடிந்து விழுந்தது.
கன மழை காரணமாக ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது .

கட்டிய ஒரு மாதத்திற்குள்ளேயே இடிந்து விழுந்த பாலம் -முதல்வர் திறந்த பாலத்தின் அலங்கோலம்..பீகார் முதல்வர் இந்த பாலத்தை திறந்து ஒரு மாதத்திற்குள்ளேயே இது நடந்துள்ளது . இப்போது, ​​இந்த சம்பவம் பீகார் அரசியலில் ஒரு புயலை உண்டாக்கியுள்ளது

இந்த சம்பவம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தேஜாஷ்வி யாதவ் நிதீஷ் குமார் அரசாங்கத்தின் மீது கடுமையான் தாக்கியுள்ளார் .

கட்டிய ஒரு மாதத்திற்குள்ளேயே இடிந்து விழுந்த பாலம் -முதல்வர் திறந்த பாலத்தின் அலங்கோலம்..இது பற்றி பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜாஷ்வி யாதவ், “8 வருட பணிக்குப் பிறகு, சத்தர்காட் பாலம் 29 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. இந்த பாலம் கட்டுவதற்கு ஆன மொத்த செலவு ரூ .264 கோடியாகும் . எதனால் இந்த பாலத்தை முதல்வர் அவசர கதியில் திறந்தார் என்றும் மக்களிடம் பாராட்டை பெற அவசரமாக முதல்வர் பாலத்தை திறந்தாரா? ” என்றும் அவர் கேள்வி எழுப்பினார் .
மேலும் இந்த பாலத்தை கட்டிய நிறுவனம் உடனடியாக மீண்டும் அதை கட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரினார்.

கட்டிய ஒரு மாதத்திற்குள்ளேயே இடிந்து விழுந்த பாலம் -முதல்வர் திறந்த பாலத்தின் அலங்கோலம்..
இந்த சம்பவம் குறித்து பீகார் மாநில பொதுப்பணி துறை அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் கூறுகையில், “இடிந்து விழுந்த பாலத்தின் ஸ்லாப் சத்தர்காட் பாலத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இதனால் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த பாலத்தின் ஸ்லாப் மட்டுமே இடிந்து விழுந்துள்ளதால் கவலைப்பட வேண்டியதில்லை . “என்று கூறினார் .