’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

 

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

அதிக பண்டிகைகள் வரும் நாட்களில் நடக்கும் பிக்பாஸ் சீசன் இதுதான். அதனால், பிக்பாஸ் வீட்டுக்குள் நிறைய கொண்டாட்டங்கள்… ஆடல், பாடல் என அதிகளவில் வரலாம். ஆயுதபூஜை விழாவில் நடந்ததுபோல நாடகம், பட்டிமன்றம் எல்லாம் நடக்கக்கூடும். கூடவே, விளம்பர இடைவேளை மட்டுமல்லாமல், வீட்டுக்குள்ளும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஆடியன்ஸ்க்கு சலிப்பூட்ட வைக்கலாம். அதற்கான முன்னோட்டம்தான் நேற்றைய எப்பிசோட்.

33-ம் நாள்

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

‘தசாவதாரம்’ பாட்டை ஒலிக்க விட்டுச்சு அந்த தம்பி. எதுக்காக இந்தப் பாட்டுனு யோசிச்சு முடிக்கறதுக்குள்ள, டான்ஸ் ஆடி முடிச்சிட்டாங்க. பாட்டும் முடிஞ்சிடுஞ்சுது! கேமரா முன், ஷனம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்போதுதான் தெரிஞ்சுது… பாட்டுல சனம்… சனம்ன்னு வந்தது.. தம்பி… நீ மட்டும் தனியா ஷனம் ஆர்மி கிரியேட் பண்ற போல இருக்கே!

மார்னிங் டாஸ்க், ஷனம் டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறதாம்…. ‘நிலா அது வானத்துல மேல’ பாட்டை செலக்ட் பண்ணினார். இத்தனை ஆயிரம் பாட்டு இருக்கையில ஏன் இந்த பாட்டுனு தோணுச்சு.. ஏன்னா, நேத்துகூட இந்தப் பாட்டை எங்கேயே பாடச் சொல்லி ஷனம் கேட்டாங்க. ’இந்தப் பாட்டுக்குத்தான் முதன்முதலா டான்ஸ் ஆடினேன்’னு ரகசியத்தை உடைக்க… சரி.. சரி… டான்ஸ் ஆரம்பிக்கலாம்னார் பிக்கி.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

ஜித்தன் ரமேஷையே ஆட வெச்ச பெருமை ஷனம்க்குத்தான் சேரும். எல்லோரும் ஆட, கடைசியாக ஷனம் ஆட எல்லோரும் ‘வாழ்க்கையைத் தேடி, நானும் போனேன்’ பாட்டைப் பாட, இருப்பு கொள்ள முடியாம கேபியும் ஆட ரகளையானது (நல்ல விதமாகத்தான் பாஸ்).

’பாலா மைக்கை மாட்டுங்க’ என கரகரன்னு பிக்கி சொன்னதும், கேப்டன் சம்யுக்தாவை தலையில் அடிச்சிகிட்டார். (சரியா கண்காணிக்கலைன்னு அவர் தலைதான் விழும் இல்லையா?) இப்படி அடிக்கடி பாலா செய்வார் போல, அதனால லக்ஸரி டாஸ்க்கில் 500 பாயிண்ட்டை எடுத்துட்டார்.

வழக்கமா, தன்னால் லக்ஸரி பட்ஜெட்டில் பாயிண்ட் குறைச்சா, அந்த நபர் வருத்தப்பட்டு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்பார். ஆனா, பாலா அதுக்கு வியாக்யானம் சொல்லிட்டு இருந்தார்.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

வாரத்தில் சிறப்பாக விளங்கியவர்களை செலக்ட் பண்ண சொன்னார் பிக்கி. இது நடப்பது வியாழக்கிழமை மத்தியானம். இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அதுக்குள்ள செலக்‌ஷனா… அப்ப வெள்ளி சனி எல்லாம் சும்மாத்தானா?

ரம்யா தனது சாய்ஸாக ஷனம், சோம்ஸ் என ஆரம்பித்தார். ஷனமை விட்டுட்டு சோம்ஸ், ஆரி, நிஷா என எல்லோரும் வண்டியைத் திருப்பினர். பாலா பெயரைச் சொன்னது இரண்டு பேர். ஒருவர் சம்யுக்தா. இன்னொருத்தர் வேற யாரு ஷிவானிதான். ஆரி பெயரை ஷனம் சொன்னது ஜெர்க் ரியாக்‌ஷன் கொடுத்தார் ரியோ. அடிக்கடி இந்த ரியாக்‌ஷன் அவருக்கு இயல்பா வருது. நல்லாவும் இருக்கு பிரதர். சுரேஷ் பெயரை அனிதா சொன்னதும் பிக்கியே ரியோவின் ரியாக்‌ஷனைக் காட்டியிருப்பார். ‘ஜோசியத்தில பிரதமராக யோகம் இருக்கு’னு சொன்னதிலேயே அனிதா மனசு மாறிட்டு போல.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

ஃபைனலாக நிஷா, ஆரி, சோம்ஸ் மூவரும் கேப்டனுக்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்டார்கள். மூவருக்கும் பிக்பாஸ் வாழ்த்து சொல்லும்போது, ‘எங்கிட்ட பர்சனலா ஏதாச்சும் சொல்லனுமா சார்?’என நிஷா கேட்டதும், சிரிப்பை அடக்கிக்கொண்டே, ‘எல்லோரும் போய் வேலையைப் பாருங்கனு’ ஆர்டர் போட்டார். ஆமா, எல்லா ஆட்டக்காரர்களும் சிறப்பா ஆட இந்த வாரம் ஜெயிலுக்கு லீவாம். 

ஆரி செலக்ட் ஆனது சம்யுக்தாவுக்கு பயங்கர ஷாக் போல. வெளியே போய் ‘எப்படி இது சாத்தியம்.. ஃபார்மலா எங்கே தப்பா போச்சு… மூலிகை ரசத்தை ஊத்தினத்துல எல்லாம் வேஸ்டா’ என்பதுபோல பாலா, ஆஜித்திடம் புலம்பிட்டு இருந்தார் சம்யுக்தா.

’என்னைக் கார்னர் செய்யத்தான் இதெல்லாம் செய்யறாங்க’னு பாலா புது கத்தியை உருவினார். சம்யுக்தா டக்குனு வாயை விட்டுடுறாங்க… அப்பறம் கேமரா ஞாபகம் வந்துடுது. அதை சமாளிக்கிறதுக்காகச் சொல்றது அபத்தமா இருக்கு.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

’கோர்ட் சீன்ல சத்தம் போட்டவரை எப்படிடா செலக்ட் பண்ணினாங்க?’னு ஆஜித்திடம் அணத்திட்டு இருந்தார் சம்யுக்தா. ’விடுங்க… சாயந்திரம்னு இருட்டு வரும்… காலையில்லன்னா வெளிச்சம் வரும்’ என்பதாக ஏதோ சொல்லி சமாளிச்சார் ஆஜித். (ஏன்னா, ஆஜித்தே ஆரிக்குத்தான் ஒட்டுப்போட்டிருந்தார். சுத்தம்)

விளம்பர இடைவேளை முடிஞ்சதும், வீட்டுக்குள் விளம்பரமாக மிக்ஸியில் சப்பாத்தி மாவு பிசைவதை மூணு டீம்களாப் பிரிஞ்சு செய்யும் டாஸ்க்கைக் கொடுத்தார். மறைமுக டாஸ்க் என்னன்னா… அந்தக் கம்பெனி மிக்ஸி பத்தி எல்லோரும் புகழ்ந்து பேசணும். பேருக்குத்தான் சப்பாத்தி மாவு டாஸ்க். இது தெரிஞ்சும், அனிதா ஜட்ஜ்ஜாகி, மூணையும் சாப்பிட்டு ரகம் பிரிச்சு மார்க் போட்டு, வெற்றியா அர்ச்சனா டீமை அறிவிச்சார். சுரேஷ் முகம் வாடிபோச்சு.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

கேப்டன் தேர்ந்தெடுக்கும் டாஸ்க். அதாவது ஒருத்தர் உடம்பை கயிற்றால் சுத்தி, அதன் ஒரு முணையை தூணில் கட்டிட்டுவாங்க. ரிவர்ஸில் சுத்தி, கயிறை பிரிக்கணும். சொல்லும்போதே கஷ்டமா இருக்கு இல்ல.

ஆனா, ஆரியும் நிஷாவும் நிஜமாகவே தீவிரமாக விளையாடினாங்க. அதுவும் நிஷா மயங்கி விழற அளவுக்கு. ஜெயிச்சது ஆரி. எதிர்பார்த்ததுதான். சில பேர் கேப்டனாக பந்து பொறுக்கினாலே போதும்னு டாஸ்க் தாரீங்க. சிலருக்கு இப்படி கஷ்டமா கொடுக்கறீங்க… என்னதான் கணக்கு பிக்கி?

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

’நீங்க ஜெயிப்பீங்கனு பல பேரு எதிர்பார்க்கல.. முகமே சொல்லிடுச்சு’ என புது ஃப்ரெண்ட் ஆரியிடம் விளக்கி வாழ்த்தினார் அனிதா.

’ஐ யம் வெரி ஸ்ட்ரிட் கேப்டனாக்கும்’ என ஆரி, உடனே வொர்க்கிங் குரூப் பிரிச்சார். மறக்காம, சம்யுக்தாவிடம், ’இந்த வார டீம் சரியா வேலையை முடிச்சிட்டு கொடுக்க சொல்லுங்க’ சொன்னார் இல்ல இல்ல எச்சரித்தார். உண்மையிலே ஆரிக்கு இது போதாத வாரம்தான். ஏன்னா, அவரின் இயல்புக்கு கேப்டன் பொறுப்பு சரியா வருமா என்பது சந்தேகமே… ஏன்னா… அவர் ரொம்ப பர்பெக்ட்டாக இருப்பதாக நினைச்சிக்கிறார். இன்னொரு அதே அளவு மத்தவங்ககிட்ட எதிர்பார்க்கிறார். இரண்டுமே குழப்பம்தான். அதனால, அடுத்த வாரம் ஃபன் இருக்காது… ஃபைட் இருக்கலாம்.

சுரேஷூம் சம்யுக்தாவும் பேசிட்டு உட்கார்ந்திருக்க, ஏதாவது கண்டண்ட் கிடைக்கலாம் என ஜூம் செய்தார் பிக்கி. அவரின் ஆசையும் எதிர்பார்ப்பும் வீண் போகல. ‘கேப்டனாக இருந்தும் ஏன் ரூல்ஸ் தெரியாம, கோர்ட்ல பேசினீங்க’னு கேட்க, அவர் பதிலுக்குச் சொல்ல, ‘நான் உங்கள காயப்படுத்தல.. நிங்களே உங்களை காயப்படுத்திட்டீங்க. அந்த காயம் உங்களுக்கு வலிச்சா நான் பொறுப்பு இல்ல. ஏன்னா, அந்த காயம்…’ என குசும்பு சுரேஷ் ’விசு’ம்பு சுரேஷாக மாறிட்டார்.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

சுரேஷ் சொன்னதுக்காகவோ இல்ல சொன்னது புரியல என்பதாலோ சம்யுக்தா அழ ஆரம்பிக்க, எங்கோ தீவிரமாக பேசிட்டு இருந்தா பாலா – ஷிவானி ஜோடி கண்ணீரைத் துடைக்க வந்துட்டாங்க.

திரும்ப வந்த சுரேஷ், ‘அம்மா சம்யுக்தா… அந்தக் காயம் நான் ஏற்படுத்தல…னு ஆரம்பிச்சதும் விநோதமாகப் பார்த்து ‘ஐயா, காயமே ஆகல… காயமான மாதிரி கனவு கண்டேன்’னு அலற ஆரம்பிச்சிட்டார் சாம்.

’நாம உளறரோமோனு சுரேஷ்க்கு டவுட் வர, உள்ளே போய் அர்ச்சனா, ரியோ குரூப்கிட்ட அதே காயத்தை விளக்க, ‘ஓடிரு பெரியவரே’ என்பதாக மரியாதையாக அர்ச்சனா விரட்டியே விட்டார். வெளியே வந்தவர் வேக வேகமாக நடந்ததை. வெளியே வந்து நேரா நடந்திருந்தால் அமெரிக்காவுக்கே போய் ஜார்ஜியா மாகாண தேர்தல் நிலவரத்தை நேரடியாகவே கேட்டுட்டு வந்திருக்கலாம். ஆத்தாடி.

’கோபக்கார கேப்டன்… வேக வேக நடை வீரர்… யார்னு தெரியுமா?’ பிக்பாஸ் 33-ம் நாள்

இன்னிக்கு பெரியளவு கண்டண்ட் இல்ல… கோர்ட் விவகாரம் பெருசா வெடிக்கும்… ஏதாச்சும் நடக்கும்னு பிக்கி காத்திருந்து, காத்திருந்து… ‘டெம்போ வெச்செல்லாம் செட் போட்டேனாடா?’எனப் புலம்பும் வாய்ஸில் பின்கதை சுருக்கத்தைப் படிச்சார். கூல் பிக்கி.

இன்று கமல் வருவார். சில பஞ்சாயத்துகள் தீர்க்கப்படலாம். குறிப்பாக, சுரேஷ் சாப்பிடாததை சமாதானப்படுத்தலாம். ஆமா, இந்த வார ஆரம்பத்துல ஷனமுக்கும், அர்ச்சனாவுக்கும் சண்டை வந்துச்சே… கமல்கிட்ட குறும்படம் கேட்பேன்னு சபதம் போட்டாங்களே ஷனம். அதை யாராவது ஞாபகப் படுத்துங்க. இல்லாட்டி, சனிக்கிழமையும் கண்டண்ட் பஞ்சம் வந்துட போகுது. லைட்ஸ் ஆஃப்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.