Home சினிமா ‘வேலை செய்யாம தூங்கினால் பெஸ்ட் பெர்ஃபார்மரா? என்ன கொடுமை இது?’ பிக்பாஸ் 26-ம் நாள்

‘வேலை செய்யாம தூங்கினால் பெஸ்ட் பெர்ஃபார்மரா? என்ன கொடுமை இது?’ பிக்பாஸ் 26-ம் நாள்

‘கொஞ்சம் ஷெட்டப் பண்ணுங்க’ ‘மருத்துவ முத்தம்’ – பிக்பாஸின் முதல் சீசனில் ஓவியா புண்ணியத்தில் இதுபோனற பல வார்த்தைகள் ட்ரெண்ட்டிங் ஆனது. அதேபோல சக்தி பேசும்போது பயன்படுத்திய ‘ட்ரிகர் பண்ணப்பார்க்கிறாங்க’ என்பது அந்த சீசன் முழுக்கவே வெவ்வேறு இடங்களில் வேறு வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த சீசனில் ’டிப்ளமேஸி’ வார்த்தை லோல் பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி என்னாதான்யா அர்த்தம் என பலரும் டிக்‌ஷனரியைப் புரட்ட வைத்துவிட்டது 26-ம் நாள் எப்பிசோட்.

26-ம் நாள்

தூரலாய் மழை கசிந்துகொண்டிருக்க, “Where is the party?’ பாடல் ஒலிக்க விட்டார் பிக்பாஸ். பார்ட்டி சாங் என்பதால் எல்லோருமே உற்சாகமாக ஆடினார்கள். குடை வைத்துக்கொண்டு ஆடினாலும் தனியே ஆட மறக்க வில்லை ஷிவானி.

சென்னையில் மழை பற்றிய செய்திகள் படித்தாலும்… பிக்பாஸ் வீட்டில் மழையை ஆச்சர்யமாகப் பார்க்கிறோம். காரணம பிக்பாஸ் வீட்டில் நடப்பதை தினமும் பார்த்தாலும், அது எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருப்பதாகவே மனதில் பதிந்துவிட்டது. உண்மையில் பொது படுக்கை அறை, பெரிய டைனிங் ஹால், நீச்சல் குளம் இவையெல்லாம் தமிழ்நாட்டில் பெரும்பாண்மையோருக்கு அந்நியம்தான். அதாவது ஒரு வீடு பற்றி அவர்கள் மனதில் இருக்கும் சித்திரத்திற்கு அந்நியம்தான்.

சின்ன கம்பில் பட்ட மழை சொட்டு கீழே விழுவதை அழகாகக் காட்டிவிட்டு, அனிதாவை ஷனம் உசுப்பேத்தும் காட்சிக்குத் தாவினார் பிக்கி. ‘அவங்க என்ன பிக்பாஸ் அசிஸிஸ்டெண்ட்டா… டைம் லிமிட் இல்லாதப்பா நிப்பாட்ட சொல்றதுக்கு?’ என்று அனிதாவிடம் பற்ற வைக்க, ’நானே மறந்துட்டேன்.. வேற வழியில்லாமல் மன்னிச்சிட்டேன்’ என்பதாக அணத்தினார். உண்மை அதுதான்.

அனிதாவுக்கு ஒரு விஷயத்தை வைத்து பெரிய சண்டை போடும் ’வித்தை’ தெரியாது. சட்டென்று உணர்ச்சி வசப்பட்டுவிடுவார். அதனால், ரெண்டு பேர்கிட்ட அணத்திட்டா…போதும் என்ற மனநிலையில் இருந்தார். ஷனம் இன்னும் பற்ற வைக்க முயல, சம்யுக்தா அதைக் கேட்டுவிட்டு உள்ளே போய் தவிக்க, என்ன ஆகப்போகுதோ என ஹவுஸ்மேட்ஸ் ஆவலாகப் பார்க்க… அனிதா அருகிலேயே அவரின் பெஸ்ட் ஃப்ரெண்ட்டு சோம்ஸ், வெகு தீவிரமாக யோகா செய்துகொண்டிருந்தார். (இவர்தான் இந்த வாரத்தின் சுவாரஸ்யமான போட்டியாளர் விருது வாங்கினார். ஆஹா…)

சபையக் கூட்டிய பிக்பாஸ் வழக்கமான சாங்கியத்தை ஆரம்பித்தார். ‘இந்த வாரத்தின் பெஸ்ட் பர்ஃபார்மர்ஸ் செய்த இருவரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். முதல் பேராக பாலா வந்தது ஆச்சர்யம். அதை அர்ச்சனா சொன்னது அதிர்ச்சி. அப்பறம் சுற்றி வளைத்து நிஷாவையும் சேர்த்து பாலா, நிஷா என்றானது.

பூர்ண விசுவாநாதன் பாணியில் ‘என்ன பகவானே இது?’ என்று கேட்கத்தோன்றியது. ஆயுத பூஜை டாஸ்கில் பாலா, பாட்டு பாடவோ, டான்ஸ் ஆடவோ செய்ய வில்லை. தங்கம் டாஸ்கில் அதிகம் சேர்த்தார் என்பதைத் தவிர சொல்லும்படி ஒன்றுமில்லை. மாறாக, பிக்பாஸ் விதிகளுக்கு எதிராக, லைட்ஸ் ஆஃப் செய்யும்முன் தூங்கியது, வேலை செய்ய மறுத்தது, கேப்டன் பேச்சைக் கேட்க மாட்டேன் எனச் சொன்னது என எதிர்விதமாகவே அவர் நடந்துகொண்டார். அர்ச்சனாவுடன் சண்டை போடும்போது இதை ஷனம் நினைவூட்டினார்.

ஆனால், அவர் அர்ச்சனா குருப்பால் எதிர்ப்பின்றி ஏற்கப்பட்டது ஆச்சர்யம். இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். பாலா கொஞ்சம் விபரீதமான ஆள். அவரிடம் ஏதும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஒதுங்கி இருக்க அர்ச்சனா குரூப் முடிவெடுத்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், பயப்படுகிறார்கள்.

சுவாரஸ்யமான போட்டியாளராக  சோம்ஸ் தேர்வு செய்யப்பட்டார். அனிதா சோம்ஸ்க்கு ஓட்டுப்போட்டார். நிச்சயம் இது குருப்பிஸமே. பிக்பாஸ் குரலில் பேசிய இடம் தவிர வேறெங்குமே சோம்ஸைப் பார்க்க முடியவில்லை. நியாயமாகப் பார்த்தால் அது சுரேஷுக்குச் சென்றிருக்க வேண்டும்.

சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக அனிதா, ஆரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கு அனிதாவை நாமினேட் செய்த பட்டியலில் சோம்ஸூம் உண்டு. அவர் மெல்ல மெல்ல அர்ச்சனாவிடம் சரணாகதி அடையத் தொடங்கிவிட்டார். அதற்கான முதல் பயன் இவ்வார விருதுபோல.

தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி கடுமையான ஆட்சேபனை வெளிப்படுத்தினார். சும்மா.. சும்மா என்னை ஜெயிலுக்கு அனுப்புவீங்களா என்று கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது. பாலாவும் சோம்ஸூம்தான் அதற்கு தகுதியான ஆட்கள். இப்போதுதான் எல்லோரும் டிப்ளமேஸியாக ஆடுகிறார்கள் என்று ஆரி சொல்ல, எல்லோரையும் காப்பாற்றும் அர்ச்சனா அந்த வார்த்தையையும் காப்பாற்ற வேண்டி தாயுள்ளம் வற்புத்தியதால். ‘டிப்ளமேஸியை கெட்ட வார்த்தை போல யூஸ் பண்ணாதீங்க’ என்றார். எங்கே நம்மளை கோர்த்துவிட்ருவாங்களோ’ என வேல்ஸ் ஒடுங்கி கொண்டார்.

ஆரியை முழுக்க பேச விட்டால், அது தன்னை நோக்கித்தான் வரும் என யூகித்த பாலா, ‘பேசு… நீதான் தைரியமான ஆளாச்சே பேசு… லவ் ஸாங்கெல்லாம் பேக் ரவுண்ட் மியூஸிக்கா போட்டு பிக்பாஸே என் பக்கம் வந்துட்டாரு… நீ பேசு ஆரி’ என்று சைலண்டாக மிரட்ட, ‘நான் அடுத்த வாரம் சொல்றேன்’ என முன் ஜாமின் வாங்கிக்கொண்டார். ஆரி கொந்ததளித்தால் அனிதா அடக்கி வாசித்தார். ஒருவேளை நான் பேச ஆரி ஸ்பேஸே கொடுக்கலன்னுபின்னால்சொல்லக்கூடும். (இதை டைப் பண்ணும்போதுகூட ஸ்பேஸ் விட மறந்துட்டேன்)

சோம்ஸ், நிஷா, பாலா மூவரும் தலைவருக்கு நாமினேட் ஆக, 1- 16 நம்பர் வரிசையில் முதலில் வந்த ரம்யாவுக்கு சலுகையாக, மூவரில் ஒருவர் அல்லது இருவரை மாற்றலாம் என்று அறிவித்தார். இதெல்லாம் ஒரு சலுகையா பாஸ்? நிஷாவுக்குப் பதில் சம்யுக்தாவை மாற்றினார் ரம்யா. இதுதான் கேம் சேஞ்ச்சாகப் போகுது என அப்போது யாருக்கும் தெரியாது.

படுக்கை அறைக்குள் அர்ச்சனா, சுரேஷ், நிஷா, பாலா உள்ளிட்ட குழு ‘இன்னிக்கு என்ன பஞ்சாயத்து’ என்பதாக ‘நான் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றி ஆரி என்னவோ புகார் சொல்றாராமே’ என்று அர்ச்சனா ஆரம்பிக்க, ‘அட ஆமாங்க, அவர் ஒரு சப்பாத்தி எக்ஸ்ட்ரா கேட்டதுக்கு இல்லன்னு சொல்லிட்டு, ரியோ கேட்டப்ப, அப்பறம்.. என கண்ணைக் காட்டுனீங்களாமே’ என்று பெட்ரோலை ஊத்தினார் பாலா. இதெல்லாம் கரெக்ட்டா செஞ்சிடுங்க தல.

வெளியே ஆரி, அனிதாவிடம் வீட்டில் நடக்கும் குரூப்பிஸம் பற்றித் தெளிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘ரியோவின் தனித்தன்மை இழக்க வைக்கிறார் அர்ச்சனா’ என்று ஆரி சொன்னது உண்மைதான். சென்ற சீசனின் சாண்டி அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட ரியோ, இப்போது அர்ச்சனா குரூப்பில் ‘சார் போஸ்ட்’ கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார். அனிதாவும் ’ஆமாம்… ஆமாம்’ என்றார்.

‘நேரடியா விஷயத்துகே வாரேன்’ என அர்ச்சனா, ஜெயில் வாசலில் உட்கார்ந்து பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.  ஆரியும் செம ஃபார்மில் இருந்தார். ‘ஆஜித்திடம் பொங்கலை அளந்து அளந்து வைத்தீர்களா’ என்று கத்தியை உருவ, ‘சாப்பாடு வேஸ்ட் ஆகிடக்கூடாது என, இது போதுமா… இன்னும் வேணுமா என்று ஆஜித்திடம் கேட்டேன். நான் எப்படிக் கேட்கணும் என்பது என் பழக்க வழக்கம் தொடர்பானது’ என்று சரியாகவே சொன்னார். பாலா நைசாக வந்து, சப்பாத்தி மேட்டரை அவித்துவிட, ‘நேரடியாகச் சொல்லாமல் கண்ணைக் காட்டினால் ரியோவுக்கு நீங்க ஃபேவர் பண்ணுவதாகத்தானே புரிந்துகொள்ள முடியும்’என்றதற்கு, கொந்தளித்துவிட்டார் அர்ச்சனா.

குறுக்கிட்ட பாலாவிடம், ‘லைட்ஸ் ஆஃப் பண்றதுக்கு முன்னாடி தூங்கினது… கேப்டன் பேச்சைக் கேட்க மாட்டேன் என்று நீ செய்ததெல்லாம் ஏன் வொர்ஸ் பர்ஃபார்மன்ஸ் விவாதத்தில் வர வில்லை’ என்று கத்தியைச் சொருகினார். பாலா திணறுவதைப் பார்க்க முடிந்தது. ஆஹா… சரியான போட்டிதான்.

ஆரி கேட்பது நியாயமான ஒன்று. வீட்டில் ஒருவர் சாப்பாட்டை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கு? ஐந்தாறு சப்பாத்திகள் அதிகமாகச் சமைக்க முடியாத அளவுக்கா பிக்பாஸ் உங்களைக் கொடுமைப்படுத்துகிறார்? இறுதியாக ஆரி சொன்னது ‘அவங்க அவங்களை அவங்க அவங்க வேலைகளைச் செய்ய விடுங்க’ என்பதே.

செம ஹாட்டான அர்ச்சனா, கெட்ட வார்த்தையோடு டைனிங் ஏரியாவுக்குள் நுழைய, ரியோ அவரின் வாயைப் பொத்த, சுரேஷ் ‘இந்தச் சாப்பாடே வேண்டாம்’ என்று கோபமாக எழுந்துச்சென்றார். ஆஜித்திடம் ‘உனக்கு ரெண்டாவது தடவை பொங்கல் வைச்சேன் தானே’ என்று குரூப்க்கு ஆள் சேர்த்துகொண்டிருந்தார். ’நீ சின்ன பையன் கமல் ஸார் விசாரிக்கையில் முன்னே பின்னே சொல்லலாம். ஆனா, எங்களுக்கு எதிராக சொல்லிட கூடாது’ என ’பாபநாசமாக்கி’னார் அர்ச்சனா.

வீட்டின் மிக சூழ்ச்சியான ஆள் பாலா என்பது வெளிப்படையாகத் தெரிந்த தருணம் புது கேப்டன் தெர்ந்தெடுக்கப்பட்ட போதுதான். சோம்ஸ், சம்யுக்தா, பாலா மூவரும் கூடையோடு நிற்க, எதிர்பக்கமிருந்து வீசப்படும் பந்துகளைப் பொறுக்கி கூடைக்குள் போட வேண்டும். யார் கூடையில் அதிக பந்துகளோ அவரே கேப்டன்.

அர்ச்சனாவின் ப்ளான்படி, சோம்ஸ், பாலா, நிஷா என கேப்டன்ஷிப்க்கு மோத வைத்து சோம்ஸ் அல்லது நிஷாவை வெல்ல வைக்க வேண்டும் என்பதே. ஆனால், ரம்யா க்ளவராக விளையாடி, அதில் நிஷாவை வெட்டி கீழே வைத்து,  சம்யுக்தாவை உள்ளே நுழைத்தார். பாலாவும் அர்ச்சனா குருப்பின் ஆசையைத் தகர்க்க, சோம்ஸை வீழ்த்தி சம்யுக்தாவை கேப்டனாக்கும் விதமாக பந்து பொறுக்கி, சம்யுக்தாவின் கூடையில் போட சம்யுக்தா கேப்டனானார். தனது ப்ளானை ஆரியிடம் போட்டு உடைக்கவும் தயங்க வில்லை.

அடுத்து வந்த காட்சிகள் எல்லாம் விளம்பரத்தாரர் நிகழ்ச்சிகளே… ஒரு டிரஸ் கம்பெனி ஆடைகளைக் கொடுத்து ஃபேஷன் ஷோ செய்யச் சொன்னார்கள். ஜோடி பிரிக்கையில் பாலா – ஷிவானி என்றானது யதேட்சைதான் பாஸ் நீங்க நம்பணும். சோஷியல் மீடியாவில், சென்ற சீசனில் இதேபோல ஃபேசன் ஷோவில் கவின் – லாஸ்லியா ஜோடியாக வந்த போட்டோக்களைப் போட்டு கலாய்த்து கொண்டிருந்தார்கள்.

அப்பா – மகள் என அர்ச்சனாவுடன் சேர்ந்து வாக்கிங் சென்றார் சுரேஷ். ஆஜித்துடன் சேர்ந்து வந்தார் ரம்யா. நிஷா – ரியோ, கேபி – சோம்ஸ், ரமேஷ் – ஷனம், வேல்ஸ் – சம்யுக்தா என ஜோடி பிரிய, எல்லோருக்கும் ஒரே பாட்டுதான் என ஒலித்து முடிக்க, சிறந்த ஜோடியாக ’அர்ச்சனா – சுரேஷ்’ செலக்ட்டானார்கள். விளம்பரதாரர் கண்டண்ட் என்பதால் அவசரம் அவசரமாக முடித்தார்கள்.

அடுத்து இன்னொரு துணிக்கடையிலிருந்து டிரஸ் வந்ததை விளம்பரமாக ரியோ வாசித்து முடிக்க, ‘நிறைய கிப்ட்ஸ் வருது.. நீங்கதான் மிஸ் பண்றீங்க’ என ஷனம் ஜெயிலில் உள்ள அனிதாவிடமும் ஆரியிடமும் சொல்லிட்டு போனார்…… ‘சீரியஸா பண்றதா நினைச்சிக்கிட்டு சிரிப்பு காட்டுவா ஷனம்’ என அனிதா சொன்னார். ஆஹா…

இரவு பத்தரை மணிக்கு ஜெயிலிருந்து இருவரையும் ரிலீஸ் செய்தார் பிக்கி. முதன்முறையாக ஜெயிலிருந்து வெளியே வருவதால் ஏகப்பட்ட குஷியில் ரெடியானார் அனிதா. ஆனால், ஆரி நான் கடவுள் ஆர்யாபோல யோகாவின் மூழ்கியிருந்தார். ’இவர் எப்ப முடிக்கிறது. நான் மட்டும் முதல்ல வந்துட்டா’ துடித்துக்கொண்டிருந்தார் அனிதா. அப்படியே பின்கதையாடலைத் தொடங்கினார் பிக்பாஸ்.

நாளை வெளியேறப்போகு போட்டியாளாரை… என்று போற போகிற போக்கில் ஒரு வார்த்தையை விட்டு கோட்டை விட்டார் பிக்கி. அதாவது சனிக்கிழமை கமல் வரும் பகுதிகள் ஷீட்டிங் நடக்கும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடப்பதுபோல பில்டப் செய்யப்படும். அதை எல்லோருக்கும் தெரியம்படி, நாளையே வெளியேற்றப்படும் என்று உலகுக்கே அறிந்த உண்மையை தன் வாயால் உறுதி செய்துவிட்டார் பிக்கி.    

மாவட்ட செய்திகள்

Most Popular

வீடு வீடாக சென்ற அமித் ஷா… குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயிலில்...

பெண்ணுக்கு பணம் தேவை -அவருக்கு பெண் தேவை -கடைசியில் நடந்ததை பாருங்க.

ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கேட்டு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

லலிதா ஜுவல்லரியில் ரூ.1000 கோடி மோசடி; சேதாரம் என்று வரி ஏய்ப்பு

லலிதா ஜுவல்லரியின் 27 கிளைகளில் கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வந்த சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் பிடிபட்டது.

“ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு?!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி உடன் பிஜேபி, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது, இதில் பாமகவுக்கு 23 ,பாஜகவுக்கு 20 என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,...
TopTamilNews