ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

241

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் வெறுத்த 11ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

நாகையகோட்டை ஊராட்சி ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் இறந்துவிட்டதால் இவரது மனைவி சவுடீஸ்வரி என்பவர் தனது ஒரே மகளான கீர்த்தனா(16) என்பவரை வளர்த்து வந்தார். தற்போது கீர்த்தனா திண்டுக்கலில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கு என்பதால் ஆன்லைன் வகுப்புக்கள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் கீர்த்தனா பங்கேற்று படிக்காமல் இருந்துள்ளார். இன்று காலை ஆன்லைன் வகுப்பில் ஏன் கலந்துகொண்டு படிக்கவில்லை என்று கூறி சவுடீஸ்வரி தனது மகளை திட்டியுள்ளார்.

இதனால் மனம் வெறுத்த கீர்த்தனா வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றார். மாலை ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் கீர்த்தனா அணிந்திருந்த துப்பட்டா மிதந்தது. இதனைகண்ட உறவினர்கள், வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், 70 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து கீர்த்தனா உடலை மீட்டனர். சம்பவம் தொடர்பாக எரியோடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.