“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

 

“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, பெரும்பாலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்கிவிட்டது. இன்னும் ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கிறது.

“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட கட்சிகளையெல்லாம் வழிக்கு கொண்டு வந்த திமுக, அவர்கள் கேட்டதில் பாதிக்கு பாதி தொகுதியை கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது. அந்த வகையில், 6 தொகுதிகளுக்கு உடன்படிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் கடமையை எங்களால் விட்டு விட முடியாது. எங்கள் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே திமுக கொடுத்த தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அவரவர் கட்சியின் பலத்துக்கு ஏற்றாற்போல தொகுதிகளை கேட்பது இயற்கை தான். அப்படி தான் நாங்களும் கேட்டோம். அதிக இடங்கள் கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என்று கூறினார்.

“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

மேலும், பாஜக – அதிமுக கூட்டணியை முறியடிப்பதற்காகவே குறைவான தொகுதிகளை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், ஒரு பாஜக எம்.எல்.ஏ கூட சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்பதே திமுகவின் இலக்கு. பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேரவைக்குள் வந்தாலும் ஆபத்து தான் என அதிரடியாக பேசினார்.