லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

பிரபல நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தாபர் இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ. 319.24 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14.24 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.372.26 கோடி ஈட்டியுள்ளது.

லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

தாபர் இந்தியா நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,865.36 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,128.19 கோடி ஈட்டியிருந்தது. தாபர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2019-20ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.1.60 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள நாடு தழுவிய லாக்டவுன் எதிரொலியாக விற்பனை மற்றும் உற்பத்தி அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தாபர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.