வருவாய் குறைந்ததால் லாபமும் குறைந்தது.. தாபர் இந்தியா லாபம் ரூ.341 கோடி

வருவாய் குறைந்ததால் லாபமும் குறைந்தது.. தாபர் இந்தியா லாபம் ரூ.341 கோடி

பிரபல நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தாபர் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.341.30 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6.18 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.363.81 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் குறைந்ததால் லாபமும் குறைந்தது.. தாபர் இந்தியா லாபம் ரூ.341 கோடி

2020 ஜூன் காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1,979.98 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,273.29 கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, கடந்த காலாண்டில் தாபர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 12.90 சதவீதம் சரிவடைந்துள்ளது.

வருவாய் குறைந்ததால் லாபமும் குறைந்தது.. தாபர் இந்தியா லாபம் ரூ.341 கோடி

தாபர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் குறைந்ததே அந்நிறுவனத்தின் லாப வளர்ச்சி குறைவுக்கு காரணம். நேற்று பங்கு வர்த்தகம் முடிந்தபோது தாபர் நிறுவன பங்கின் விலை 0.56 சதவீதம் குறைந்து ரூ.507.00-ல் முடிவுற்றது.