சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

 

சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

ஆரணி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுக்காமூர் தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவரது வீட்டில் சில நாட்களாகசமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உபயோகித்து வந்ததால் கடந்த 15 ஆம் தேதி சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 7 பேர் சிக்கிய நிலையில் 8 வயது சிறுவன் ஹேம்நாத் உள்பட 3 பேர் பலியாகினர்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இந்நிலையில் ஆரணி சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பூ வியாபாரம் செய்யும் முத்தாபாய் மற்றும் அவரது வளர்ப்பு மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

முன்னதாக ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.