சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

 

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. டவ்தே புயல் இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. இதனால் கேரளா, கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புயல் எச்சரிக்கை தமிழகத்திற்கும் விடப்பட்டுள்ள நிலையில், புயலின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பது, இடர்பாடுகளை களைவது, முகாம்கள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொரோனா பேரிடர் காலத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார். முதல்வருடனான ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் , தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன், வருவாய் பேரிடர் துறை மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.