பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

 

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது. இந்த புரெவி புயல் நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்த நிலையில் தற்போது பாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புரெவி புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

புரெவி புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என்றும் புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை 1077, 0461 2340101, 94864 54714 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரெவி புயலால் தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடப்பட உள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் விரைவு ரயில் நாளை மதுரையுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ரயில் நாளை மதுரையில் இருந்தே சென்னைக்கு செல்லும் இதே போன்று மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலும் மதுரையுடன் நிறுத்தப்பட்டு நாளை இரவு மதுரையில் இருந்து மைசூரு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.