நிசர்கா புயல்: மும்பையை நோக்கி நகர்ந்து வருகிறதா? – எப்போது புயல் வலுவிழக்கும்?

 

நிசர்கா புயல்: மும்பையை நோக்கி நகர்ந்து வருகிறதா? – எப்போது புயல் வலுவிழக்கும்?

மும்பை: அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் மும்பையை நோக்கி நகர்ந்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு நிசர்கா புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் இவ்விரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஜூன் 5-ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

நிசர்கா புயல்: மும்பையை நோக்கி நகர்ந்து வருகிறதா? – எப்போது புயல் வலுவிழக்கும்?

1891-ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தை தாக்கவிருக்கும் முதல் ஜூன் மாத வெப்ப மண்டல புயல் இதுவாகும். நிசர்கா புயல் மும்பையை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாளை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ஜூன் 3-ஆம் தேதி நிசர்கா புயல் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.