சுற்றுச்சூழல் காப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கும் சைக்கிளிங்!

 

சுற்றுச்சூழல் காப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கும் சைக்கிளிங்!

சைக்கிள் பயணம்… அது ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஷிவ்ராக் என்பவர் மரத்துண்டுகளால் ஆன சைக்கிளை வடிவமைத்தார். 1839-ம் ஆண்டு மேக்மில்லன் என்பவர் சைக்கிளை கண்டுபிடித்ததாக வரலாறுகள் சொல்கின்றன. பிறகு டன்லப் என்பவர்தான் ரப்பர் சக்கரத்தில் சைக்கிளை மாற்றியமைத்தாராம். பிறகு படிப்படியாக பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு இன்றைக்கு பந்தயம் செல்லுமளவுக்கு சைக்கிள் உருமாறியிருக்கிறது.

சுற்றுச்சூழல் காப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கும் சைக்கிளிங்!தேடல்:
எரிபொருள் செலவில்லாதது, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதது மட்டுமல்ல சைக்கிள் ஓட்டுவதால் அன்றையநாள் முழுவதும் நாம் புத்துணர்ச்சியாக இருக்க உதவும். இன்றைய சூழலில் பைக், ஆட்டோ, கார் வந்துவிட்டதாலும் அவசரம், வேகம் காரணமாகவும் சைக்கிளின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனாலும், இன்றைக்கு குறிப்பிட்ட சில இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் தேடலின் விளைவாக இந்த சைக்கிள் பயணம் மீண்டும் புதுப்பிறப்பெடுத்திருக்கிறது.

உடற்பயிற்சி செய்வதற்காக நேரம் ஒதுக்குவதுடன் பணம் செலவழிக்க வேண்டியிருப்பதாலும், கார் – பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான எரிபொருளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருப்பதாலும் சைக்கிளை கையிலெடுத்திருக்கிறார்கள். கூடவே, சுற்றுச்சூழல் மாசுபடாமலிருக்க தங்களால் ஆன பங்களிப்பைக் கொடுத்த மனநிறைவு கிடைப்பதால் பலரும் `சைக்கிளிங்’ செய்கின்றனர். சென்னை போன்ற முக்கிய நகரங்களில் `ஸ்மார்ட் பைக்’ திட்டம் ஒன்றை அறிவித்திருப்பதன்மூலம் மீண்டும் இந்த சைக்கிள் பயணம் அதிகரித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் காப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கும் சைக்கிளிங்!
சுறுசுறுப்பு:
சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் கூறினார்.
“சைக்கிள் ஓட்டுவதால் இதயத்துடிப்பு சீராகிறது. வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன. இதுதவிர டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். சைக்கிள் ஓட்டுவதால் கால் மற்றும் தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறுகின்றன.

இன்றைக்கு பெருவாரியான மக்களைப் பாதிக்கும் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க சைக்கிளிங் உதவும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர் சைக்கிள் ஓட்டுவதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.

சுற்றுச்சூழல் காப்பதுடன் நோய்கள் வராமல் தடுக்கும் சைக்கிளிங்!புற்றுநோய்:
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியக் காரணியாக உள்ள உடல்பருமனை தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் குறைகிறது. சைக்கிள் ஓட்டுவதன்மூலம் இதுபோன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன”.

வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் சைக்கிள் பயணம் பலன் தரும். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இந்த சைக்கிள் பயணம் பல்வேறுவிதத்தில் பயன் தரும் என்பது உண்மை.